×

கஞ்சா விற்றவர் கைது

திருச்சி, மார்ச் 12:  திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கன்டோன்மென்ட் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்றுமுன்தினம் எஸ்ஐ பாஸ்கர் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது போலீசாரை கண்டதும் ஒருவர் தப்பியோட முயன்றார். அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்த போலீசார் 1 கிலோ 250 கிராம் கஞ்சா மற்றும் ரூ.350 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், தென்னூர் சின்னசாமி நகரை சேர்ந்த சையது (49) என்பது தெரிந்தது. அவரை  போலீசார் கைது செய்தனர்.

Tags : Cannara ,soldier ,
× RELATED தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு!