×

வெண்ணந்தூரில் கரும்பில் கரிப்பூட்டை நோய் தாக்குதல்

ராசிபுரம், மார்ச் 12: வெண்ணந்தூர் வட்டாரப்பகுதிகளில் கரும்பில் நோய் தாக்குதல் குறித்து வேளாண் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.வெண்ணந்தூர் பகுதியில் உள்ள மின்னக்கல் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை(அட்மா) திட்டத்தின் கீழ் கரும்பு சாகுபடியில் ஏற்பட்டுள்ள நோய், பூச்சிகள் தாக்குதல் குறித்து வேளாண்மை துறை அலுவலர்கள், வட்டார விரிவாக்க அலுவலர்கள் விவசாய நிலங்களில் ஆய்வு மேற்கொண்டனர். வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராஜகோபால் தலைமையில் வயல் வெளிகளில் ஆய்வு செய்த அலுவலர்கள், மண், நீர் பரிசோதனை, கோடை உழவு செய்தல், கரணைகளை விதைநேர்த்தி செய்து நடவு செய்தல், நுண்ணூட்ட சத்துகளின் பயன்கள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கினர்.  ஏத்தாப்பூர் உழவியல் துறை பேராசிரியர் ராஜா, கரும்பு பயிரில் கரிப்பூட்டை நோய் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்நோயானது, கரும்பின் வளர்ச்சி பகுதியிலிருந்து சாட்டை வடிவம் 25 முதல் 150 செ.மீ வரை காணப்படும். கணுவிடைப்பகுதி நீண்டு ஆரம்பத்தில் தடிமன் குறைய ஆரம்பிக்கும். பின்பு கரும்பின் நீளமும் குன்றிவிடும். இந்நோயை கட்டுப்படுத்த நன்கு எதிர்ப்பு திறன் கொண்ட கே.சி.22, கோ-86249, கோ-ஜி-5 போன்ற ரகங்களை பயிரிட வேண்டும். துவரை பயிரை கரும்பு வரிசைக்கு இடையே பயிரிடுவதால் பூஞ்சாணங்களின் இரண்டாம் நிலை பரவல் குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆய்வின் போது, உதவி வேளாண்மை அலுவலர் அருண்குமார், வட்டார தொழிநுட்ப மேலாளர் கிருபா, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் செல்வகண்ணன், பார்த்திபன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டார்கள்.

Tags : cannon attack ,
× RELATED கோழிகளை திருடிய சிறுவன் சிக்கினான்