×

கோழிகளை திருடிய சிறுவன் சிக்கினான்

சேந்தமங்கலம், ஜூன் 14: சேந்தமங்கலம் அடுத்த பள்ளம்பாறை வாழக்காட்டான் கோயில் பகுதியில், சுமார் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. கொல்லிமலை அடிவார பகுதி என்பதால், இங்குள்ள வீடுகளில் அதிக அளவில் கோழிகளை வளர்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக, வீடுகளில் வளர்க்கப்பட்டு வரும் கோழிகள், அடிக்கடி காணாமல் போனது. கோழிகளை வனவிலங்குகள் பிடித்து செல்கிறது என அப்பகுதி மக்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் அப்பகுதியில் 17 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன், கோழிகளை திருடி பைக்குக்குள் போட்டுக் கொண்டிருந்தான். இதை பார்த்த பொதுமக்கள், அவனை மடக்கி பிடித்து விசாரித்த போது, சேந்தமங்கலம் அடுத்த ராமநாதபுரம் புதூரை சேர்ந்தவன் என்பதும், தொடர்ந்து கோழிகளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து, சிறுவனை சேந்தமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் சிறுவனிடம் விசாரித்து வருகின்றனர்.

The post கோழிகளை திருடிய சிறுவன் சிக்கினான் appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Pallamparai Vazhakkatan ,Kollimalai ,
× RELATED அரளிப்பூ விளைச்சல் அமோகம்