×

காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் 345 வாக்குப்பதிவு மையங்கள் தயார்

காரைக்குடி, மார்ச் 12:காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 345 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டு காரைக்குடி, தேவகோட்டை நகராட்சி மற்றும் ஒன்றியம், பேரூராட்சிகள் உள்ளன. காரைக்குடி கிராமப்பகுதிகளில் 47 இடங்களில் 104 பூத் அமைக்கப்பட்டுள்ளது. கிராமப்பகுதிகளில் 40,263 ஆண் வாக்காளர்களும், 41,347 பெண் வாக்காளர் மற்றவர்கள் 22 பேர் என 81 ஆயிரத்து 632 வாக்காளர்கள் உள்ளனர். காரைக்குடி நகராட்சி பகுதியில் 43 இடங்களில் 93 பூத் அமைக்கப்பட்டுள்ளது. 42,326 ஆண் வாக்காளர்களும், 43,567 பெண் வாக்காளர்கள் மற்றவர்கள் 7 பேர் சேர்த்து 85 ஆயிரத்து 900 வாக்காளர்கள் உள்ளனர். தேவகோட்டை கிராமப் பகுதிகளில் 85 இடங்களில் 108 பூத் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் 44,735 ஆண் வாக்காளர்கள், 44,727 பெண் வாக்காளர்கள் மற்றவர்கள் 10 பேர் என 89 ஆயிரத்து 472 வாக்காளர்கள் உள்ளனர். தேவகோட்டை நகராட்சி பகுதியில் 22 இடங்களில் 40 பூத் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் 18,897 ஆண் வாக்காளர்கள், 19,950 பெண் வாக்காளர்கள் மற்றவர்கள் ஒருவர் என 38 ஆயிரத்து 848 பேர் உள்ளனர். மொத்தம் 197 இடங்களில் 345 பூத் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமன்ற தொகுதியில் 1,46,221 ஆண் வாக்காளர்களும், 1,49,591 பெண் வாக்காளர்கள், மற்றவர்கள் 40 பேர் என 2 லட்சத்து 95 ஆயிரத்து 852 பேர் உள்ளனர். வாக்காளர்கள் சேர்க்கும் பணி முடிவடையாத நிலையில் மேலும் வாக்காளர்கள் எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது.

Tags : voting centers ,assembly constituency ,Karaikudi ,
× RELATED கட்சி பேனரில் பெயர் போடுவதில் தகராறு...