×

ராணுவ மையம் எதிரே பராமரிப்பின்றி தூர்ந்த திரிகுளம்: திறந்தவெளி பாராக மாறியது

ஆலந்தூர்: மணப்பாக்கம் பிரதான சாலையை ஒட்டி ராணுவ மையத்துக்கு எதிரே உள்ள திரிகுளத்தை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால் தூர்ந்து, புதர்மண்டியுள்ளது. இதனால், குடிமகன்கள் அதனை திறந்தவெளி பாராக  பயன்படுத்தி வருகின்றனர்.  
மணப்பாக்கம் 157வது வார்டுக்கு உட்பட்ட மணப்பாக்கம் பிரதான சாலையை ஒட்டி ராணுவ மையத்துக்கு எதிரே பழைமையான திரிகுளம் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப்பகுதி மக்களின் முக்கிய நீராதாரமாக  விளங்கிய இந்த குளத்தை உள்ளாட்சி அமைப்பினர் கண்டுகொள்ளாமல் விட்டதால் தூர்ந்து கட்டாந்தரையாகவும், புதர்மண்டியும் காட்சியளிக்கிறது.இதனால், ஆண்டுதோறும் மழைநீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. தற்போது, இந்த இடத்தை குடிமகன்கள் மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வருவதால், சுற்றுப் பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘மணப்பாக்கம் ஊராட்சி கடந்த 2011ல் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு 157வது வார்டாக உருவானபோது இந்த திரிகுளத்தினை தூர்வாரி பராமரிக்க வேண்டும், என மாநகராட்சி  அதிகாரியிடம் மனு கொடுத்தோம். அப்போது, குளத்தை பார்வையிட்ட அதிகாரிகள் விரைவில் சீரமைத்து தருவதாக கூறிச்சென்றனர். ஆனால், மீண்டும் இந்த பக்கமே திரும்பவில்லை. இந்த குளத்து நீரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் குளிப்பதற்கும், வீட்டு உபயோகத்திற்க்கும் பயன்படுத்தி வந்தோம். தற்போது நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனை பயன்படுத்தி குடிமகன்கள் மது அருந்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களால் தொந்தரவு ஏற்படுகிறது. எனவே இந்த குளத்தினை முறையாக தூர்வாரி பராமரிக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags :
× RELATED அபார வளர்ச்சியால் விரிவடையும்...