×

டி.கல்லுப்பட்டி அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு

பேரையூர், மார்ச் 8: டி.கல்லுப்பட்டி அருகே புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது காரைக்கேணி. இந்த கிராமத்தில் ஏற்கனவே டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த நிலையில் இதே கிராமத்தில் புதியதாக மேலும் ஒரு டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தகவலறிந்த காரைக்கேணி கிராமத்து பெண்கள் புதிதாக டாஸ்மாக் கடை திறக்ககூடாது என்றும், ஏற்கனவே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என டி.கல்லுப்பட்டி காவல் நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட மினி வேனில் வந்தனர்.தகவலறிந்த இன்ஸ்பெக்டர் விஜயகாண்டீபன் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பெண்கள் கூறும்போது, ‘ஏற்கனவே உள்ள டாஸ்மாக் கடை குடியிருப்பு பகுதிக்குள் உள்ளது. இந்த பகுதியில் புதியதாக குடியிருப்பு வீடுகள் அதிகமாக உருவாகி வருகிறது. இந்த சாலையில் காரைக்கேணி, மங்கம்மாள்புரத்திலிருந்து மாணவிகள் சைக்கிள்களிலிலும், நடந்து சென்றும் வருகின்றனர். இதில் டாஸ்மாக்கில் குடித்து விட்டு டூவீலரில் வருபவர்கள் போதையில் மாணவிகள் மற்றும் பெண்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்துகின்றனர். பெண்கள் தனியாக ஸ்கூட்டி மற்றும் சைக்கிளில் வரும்போது குடித்து விட்டு போதையில் லிப்ட் கொடு என வழிமறித்து வம்பு செய்கின்றனர்.

இதனால் இப்பகுதி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மேலும் இப்பகுதியிலுள்ள விவசாய நிலங்களில் குடித்துவிட்ட பாட்டில்களை உடைத்து போடுகின்றனர். இதனால் பயிரிட்ட நிலத்தில் களை எடுக்கும்போது பெண்கள் கால்களில் பீங்கான் குத்தி அதிகம்பேர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் மேலும் புதியதாக ஒரு டாஸ்மாக் கடை நிறுவ முயற்சிக்கின்றனர். என புதியதாக டாஸ்மாக் கடை வரவும் கூடாது. இருக்கின்ற டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் எனக்கூறினர். கடையை அகற்ற மனு கொடுங்கள். மேலதிகாரிக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன் பிறகு சாலை மறியலில் ஈடுபட இருந்த பெண்கள் கலைந்து சென்றனர்.

Tags : women ,toll shop ,D. Kallupatti ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...