×

ெதாழில் நல்லுறவு விருது: விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

திருச்சி, மார்ச் 8:   திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) சதீஸ்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: தமிழக அரசின் தொழில்துறையினரால் வழங்கப்பட உள்ள தொழில்நல்லுறவு விருது 2017ம் ஆண்டுக்கு விண்ணப்பிக்கும் காலம் 30.11.2018ல் முடிந்தது. ஆனால், போதுமான விண்ணப்பங்கள் பெறப்படாத காரணத்தால் கால அவகாசம் வரும் ஏப்.30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2017ம் ஆண்டுக்கான விருதுக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. மேலும் 2018ம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2017 மற்றும் 2018ம் ஆண்டுக்கான விண்ணப்பங்களை தனித்தனியே அனுப்ப வேண்டும். ஒவ்வொரு விண்ணப்பத்துடனும் விண்ணப்ப கட்டணமாக விண்ணப்பித்தவர் தொழிற்சங்கமானால் ரூ.100ம் வேலையளிப்பவரானால் ரூ.250ம் செயலாளர்/ தனித்துணை ஆணையர், ெதாழில்நல்லுறவு பரிசுக்குழு, தொழிலாளர் ஆணையர் அலுவலகம், சென்னை-6 என்ற பெயருக்கு பாரத ஸ்டேட் வங்கியின் கருவூல கிளையில் 023-00 Labour and Employment 800 other Receipts- AG Recipts of Labour Department, (DP Code No.0230 00 800 AG 06) என்ற பெயரில் செலுத்திய அசல் செலுத்துசீட்டு(Chalan) வைத்து அனுப்ப வேண்டும்.

Tags :
× RELATED திருச்சி மாவட்ட கோர்ட்டுகளில் மக்கள்...