×

ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய முடியாமல் திணறல் ஆட்கள் இல்லை.. சர்வரும் ஸ்லோ

உத்தமபாளையம், மார்ச் 7: தேனி மாவட்டத்தில் தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம், உத்தமபாளையம், க.புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, ஓடைப்பட்டி உள்ளிட்ட 22 டவுன் பஞ்சாயத்துக்கள் உள்ளன. வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்வோர் என்ற அடிப்படையில் தமிழக அரசின் சிறப்பு நிதி பெறுவதற்காக 2 ஆயிரம் ரூபாய் பெறும் படிவத்தை பூர்த்தி செய்து கடந்த 1ம் தேதி வரை பொதுமக்கள் தந்தனர். இதனை முறையாக ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி தினந்தோறும் பேரூராட்சிகளில் உள்ள பணியாளர்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஒவ்வொரு பேரூராட்சிக்கும் 1 கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மட்டுமே உள்ளார். ஆனால் சராசரியாக பெரிய டவுன் பஞ்சாயத்துக்கள் என்றால் 5ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை விண்ணப்ப மனுக்கள் வந்துள்ளன.

சிறிய டவுன் பஞ்சாயத்துக்களில் குறைந்தது 3ஆயிரம் மனுக்கள் வந்துள்ளன. இதனை இரவு, பகலாக பதிவேற்றம் செய்யும் பணி நடக்கிறது. ஆனால் பேரூராட்சிகளின் உயர் அதிகாரிகள் இதனை விரைவுபடுத்துமாறு கூறியுள்ளனர். ஆனால், இதற்கான பணிகள் மந்தமாகவே நடக்கின்றன. காரணம் பகல் நேரங்களில் சர்வர் மிகவும் ஸ்லோவாக வேலைசெய்வதால் ஒருபடிவத்தை ஏற்றுவதற்கு 20 நிமிடங்கள் வரை செலவாகிறது. அதேநேரத்தில் இரவு என்றால் 5 நிமிடம் மட்டுமே ஆகிறது. இதனால் தனியாக கூலியாட்களை நியமித்து படிவங்களை ஏற்றுவதில் சில பேரூராட்சிகள் களமிறங்கியுள்ளன.
இதுகுறித்து பணியாளர்கள் கூறுகையில், `` சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் 2 ஆயிரம் பெற்றிட விண்ணப்ப மனுக்கள் குவிந்து கிடக்கின்றன. இதனை சரிசெய்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்குள் பல பிரச்னைகள் எழுகின்றன. ஆட்கள் பற்றாக்குறை, சர்வர் பிரச்னை என தாமதம் தவிர்க்க முடியாதாகி உள்ளது’’ என்றனர்.

Tags : strangers ,
× RELATED அறிமுகம் இல்லாதவர்களுக்கு தானே செய்த...