×

புதிய நிர்வாகிகள் தேர்வு

வத்தலக்குண்டு: நிலக்கோட்டையில் சைல்டுவாய்ஸ் தொண்டு நிறுவனத்தின் பெண்கள் சமுதாய நலக்குழு கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது. சைல்ஸ் வாய்ஸ் நிர்வாக அறங்காவலர் அண்ணாதுரை தலைமை வகிக்க, நிதி மேலாளர் மனோகரன், திட்ட மேலாளர் ரம்யா, திட்ட இயக்குனர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் மணியக்காரன்பட்டி பாண்டியம்மாள் தலைவராகவும், கந்தப்பக்கோட்டை மல்லிகா துணைத்தலைவராகவும், காட்டுநாயக்கன்பட்டி கவிதா செயலாளராகவும், குல்லிசெட்டிபட்டி முனியம்மாள் துணைசெயலாளராகவும், வீலிநாயக்கன்பட்டி பாண்டீஸ்வரி பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.  திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் தொகுத்து வழங்கினார். திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வனிதா, தமிழ்மொழி, நாகஜோதி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags :
× RELATED அரசு பஸ் டிரைவர்களுக்கு சர்க்கரை கரைசல் வழங்கல்