×

அங்காளம்மன் கோயிலில் மயான கொள்ளை

செங்கல்பட்டு, மார்ச் 7: மாசி மாத அமாவாசையையொட்டி செங்கல்பட்டு அடுத்த ஆத்தூரில்  இருந்து அங்காளம்மன் அலங்கரிக்கப்பட்டு, பாலாற்றங்கரை வரை வீதியுலா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் தங்கள் உடலில் அலகு குத்தி கார், லாரி, ஆட்டோக்களை இழுத்து சென்றனர். அதேபோல், அம்மன் வலம் வந்த தேரில் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியபடி சென்று ேநர்த்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து, பாலாற்றங் கரையில் நடந்த மாயான கொள்ளையில் பக்தர்கள், தங்கள் நிலங்களில் விளைந்த காய்கறிகள், பழங்கள், தானியங்களை அங்காளம்மனுக்கு படையலிட்டு, பூஜை செய்து கொள்ளையிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஆத்தூர், வில்லியம்பாக்கம், திம்மாவரம், சாத்தனாஞ்ேசரி, சீத்தனாஞ்சேரி, கலியபேட்டை, பினாயூர் உள்பட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் ஏராளமனோர் கலந்துகொண்டனர். இதேபோல் செங்கல்பட்டு மேட்டுத் தெருவில் உள்ள அங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற மாயான கொள்ளையில்  பக்தர்கள் ஆட்டோ மற்றும் கார்களை அலகு குத்தி இழுத்து சென்று, நேர்த்தி கடன் செலுத்தினர். மேலும்  பழவேலி பாலாற்றில் மாயன கொள்ளை நிகழ்ச்சி நடைெபற்றது.

Tags : robbery ,Angalman ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் 6 வழிப்பறி...