×

மொபட் மோதி வியாபாரிகாயம்

திருச்செந்தூர், மார்ச் 7: குரும்பூர் அருகே திருமலர்புரத்தை சேர்ந்தவர் பொன்ராஜ்(53). முட்டை வியாபாரி. இவர் சம்பவத்தன்று அங்குள்ள வழுக்குப்பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த திருமலர்புரம் தெற்கு தெருவை சேர்ந்த பால்துரை(47) என்பவர் மொபட் பொன்ராஜ் மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குரும்பூர் எஸ்ஐ சின்னத்துரை வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

Tags : Mobt ,
× RELATED மொபட்டில் இருந்து கீழே விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி சாவு