×

சார்பதிவாளர் அலுவலகத்தில் ‘கறார்’ வசூல் பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருச்சி, மார்ச் 5: திருச்சி கே.சாத்தனூர் சப்.ரிஜிஸ்டர் அலுவலகத்தில் சார்பதிவாளர் பொதுமக்களிடம் கறார் வசூல்வேட்டை நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருச்சி கே.கே.நகர் சப்ரிஜிஸ்டர் அலுவலகத்தில் சார்பதிவாளராக உறையூரில் பணியில் இருந்த அதிகாரி கடந்த 22ம் தேதி பொறுப்பேற்றார். உறையூரில் 3 ஆண்டுகள் பணி முடிந்த நிலையில் அவர் துறையூர் சப்ரிஜிஸ்டர் அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அங்கு செல்லாமல் தனக்கு நெருக்கமான அதிகாரிகள் மூலம் ரூ.20 லட்சம் செலவழித்து கே.கே.நகர் அலுவலகத்திற்கு பணி மாறுதல் பெற்றார். இதுகுறித்து அலுவலகத்தில் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில், ஏற்கனவே துறையூரில் பணியில் இருந்தபோது, அங்கு பணியில் உள்ள அலுவலக ஊழியர்களிடம் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கிருந்து உறையூருக்கு மாறுதலாகி வந்தார். தற்போது 3 ஆண்டுகள் முடிந்த நிலையில் மீண்டும் துறையூருக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் ரூ.20லட்சம் செலவழித்து கே.கே.நகருக்கு மாறுதல் பெற்றார். இங்கு கடந்த 22ம் தேதி பொறுப்பேற்றது முதல் பொதுமக்களிடம் கறார் வேட்டை நடத்தி வருகிறார். 1,500 சதுரஅடி இடத்திற்கு பத்திர பதிவு செய்வதற்கு ரூ.6000, 2,500 சதுரஅடிக்கு ரூ.10 ஆயிரம், ரூ.40 லட்சத்திற்கு அதிகமான மதிப்புள்ள வீட்டிற்கு பத்திரப்பதிவுக்கு ரூ.20 ஆயிரம், அந்த வீட்டை களப்பணி என பார்வையிடுவதற்கு தனியாக ரூ.2,500 மற்றும் காரில் அழைத்து செல்ல வேண்டும். வங்கியில் வீட்டு கடன் பெற்று எம்ஓடி பதிவு செய்ய ரூ.1,500 என தீவிர வசூல் வேட்டை நடத்தி வருகிறார். இந்த வசூல் வேட்டைக்காக அலுவலகத்தில் அவருக்கென ஒரு ஊழியர் உள்ளார். அவர் மூலமே அனைத்தும் நடைபெற்று வருகிறது என்றார்.

Tags : COMMERCIAL OFFICE ,RECEIVING CRUITS ,
× RELATED திருச்சி எ.புதூரில் பைக் திருடன் கைது