×

இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 2வது நாளாக தாசில்தார்கள் உள்ளிருப்பு போராட்டம் கலெக்டர் அலுவலகத்தில் பணிகள் பாதிப்பு

மதுரை, மார்ச் 6: இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை கலெக்டர் அலுவலகத்தில் 2வது நாளாக நேற்று தாசில்தார்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால், பணிகள் பாதிக்கப்பட்டன.நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் தாசில்தார்களை வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி தமிழகம் முழுவதும் 270 தாசில்தார்கள் கடந்த 27ம் தேதி இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 28ம் தேதி முதல் தாசில்தார்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் தொடர்ச்சியாக தற்போது உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.மதுரை கலெக்டர் அலுவலகத்தில், நேற்று 2வது நாளாக இடமாறுதலை ரத்து செய்யக்கோரி, தாசில்தார்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். செயலாளர் பாண்டி, பொருளாளர் முத்துப்பாண்டி, மாநில துணை செயாலர் கோபி, அரசு ஊழியர் சங்க செயலாளர் நீதிராஜா, வணிகவரித்துறை அலுவலர் சங்க செயலாளர் ராஜா, வேலைவாய்ப்புத்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் பேசினர். இதேபோல, மதுரை மேற்கு, திருமங்கலம், மேலூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட அனைத்து தாலுகா அலுவலகத்திலும் உள்ளிருப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது.

Tags : workshops ,office ,protest ,Collectorate ,
× RELATED பஸ் ஸ்டாப்பில் இடையூறாக நிறுத்திய டூவீலர்கள் அகற்றம்