×

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்கும் பயிற்சி

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள பவானிசாகர் மற்றும் சத்தியமங்கலம் வனச்சரக பணியாளர்களுக்கான நீர்நிலைகள் கண்காணிப்பு மற்றும்  யானைகள் நடமாட்டத்தை கண்காணிப்பது குறித்த ஒருநாள் பயிற்சி நேற்று பண்ணாரி வனப்பகுதியில் உள்ள எக்காலஜி பார்மில் நடைபெற்றது.  வனத்துறை மற்றும் உலகளாவிய இயற்கைக்கான நிதியம் இணைந்து நடத்திய இப்பயிற்சியில் கோடைகாலங்களில் நீர்நிலைகளில் தண்ணீர் குறைவாக இருப்பதால் வனவிலங்குகள் மற்றும் கால்நடைகள் அவற்றை பருகும்போது நீரின் தன்மையால் விலங்குகள் நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளது.இதனால், நீர்நிலைகளை கண்காணித்து மேம்படுத்துதல், யானைகள் நடமாட்டம் எந்த பகுதியில் அதிகமாக உள்ளது என்பதை கண்டறிந்து குறித்து இரு வனச்சரகங்களை சேர்ந்த பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. உலகளாவிய இயற்கைக்கான நிதியம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பூமிநாதன் பயிற்சி அளித்தார். இப்பயிற்சியில், வனச்சரக அலுவலர்கள் சத்தியமங்கலம் பெர்னாட், பவானிசாகர் ஜான்சன் மற்றும் வனவர்கள், வனக்காப்பாளர்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED சாராய வியாபாரிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை