×

காரைக்காலில் மகா சிவராத்திரி விழா கூட்டு சிவலிங்க பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு

காரைக்கால், மார்ச் 6: காரைக்காலில் மகா சிவராத்திரியையொட்டி கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சியாக பூஜ்ய ஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகள் அமைப்பான, பூஜ்ய  ஓம்காரநந்தா சுவாமியின் தலைமையில் செயல்படும் தர்ம ரக்ஷ்ணா ஸமிதி சார்பில் காரைக்கால் அம்மையார் குளக்கரையில் நேற்று முன்தினம் மாலை மகா சிவராத்திரி வழிபாடு நடத்தப்பட்டது. காரைக்கால் அம்மையார் குளக்கரையில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சிறிய வடிவிலான சிவலிங்கம் மற்றும் பூஜை பொருட்களுடன்  பங்கேற்றனர். பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு, அமைப்பின் சார்பில், களி மண்ணால் தயார் செய்யப்பட்ட சிறிய அளவிலான சிவலிங்கம், ருத்ராட்சம், அட்ச்சதை, நிவேதன பிரசாதம், விபூதி, குங்கும பிரசாதம், தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, குளக்கரையில் மேற்குப் புறத்தில் பீடம் அமைத்து, அதில் சிவலிங்கம் ஒன்றை வைத்து திருநள்ளாறு கோயில் சிவாச்சாரியார் மந்திரங்கள் கூறினார். பக்தர்கள் வைத்திருந்த சிவலிங்கத்துக்கு சிவாச்சாரியார் கூறியபடி அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். 2 மணி நேரத்துக்கும் மேலாக பூஜை நடைபெற்றது. இதேபோன்று இந்த அமைப்பின் சார்பில், நிரவி பகுதி கார்க்கோடபுரீசுவரர் கோயில் வளாகத்திலும் கூட்டு சிவலிங்க பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Karaikal ,
× RELATED ரூ.3.90 கோடி செலவில் காரைக்கால் மீன்பிடி...