×

ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்தை மர்ம டிரோன் வேவு பார்த்ததா? : அதிகாரிகள் போலீசில் புகார்

சென்னை, மார்ச் 6: சென்னை நேப்பியர் பாலம் அருகே ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளம் உள்ளது. இதில் கடற்படை அதிகாரிகள், குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஐஎன்எஸ் அடையாறு தளத்திற்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கி சென்னை நகரில் முக்கிய பகுதிகளுக்கு செல்வது வழக்கம்.  இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9.15 மணியளவில் ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்கு சொந்தமான இடத்தில் ஆளில்லா குட்டி விமானம் (டிரோன்) 5 முதல் 10 நிமிடங்கள் வரை வட்டமிட்டு புகைப்படம் எடுத்து விட்டு அங்கிருந்து மாயமானது.

இதுதொடர்பாக  கடற்படை அதிகாரி அனில்குமார் சென்னை கோட்டை காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்தார். அந்த புகாரில் தடை செய்யப்பட்ட பகுதியில் ஆளில்லா குட்டி விமானம் பறந்துள்ளது. அதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். பறந்ததற்கான வீடியோ பதிவையும் அளித்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் கோட்டை போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காஷ்மீரில் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறிவரும் சூழலில் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், இன்று பிரதமர் மோடி சென்னை வரும் நிலையில், கடற்படைக்கு சொந்தமான இடத்தில் மர்ம ஆளில்லா குட்டி விமானம் பறந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : INS Adair ,
× RELATED ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்தை மர்ம டிரோன் வேவு பார்த்ததா?