×

மதுராந்தகம், அச்சிறுப்பாக்கத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

மதுராந்தகம், மார்ச் 6: தேர்தலுக்காக வட்டா வளர்சி அதிகாரிகளை பணியிடம் மாற்றுவதை கண்டித்தும், அந்த உத்தரவை திரும்ப பெறக்கோரியும் மதுராந்தகம் மற்றும் அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று, ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் தேர்தல் பணிக்காக பணியிடமாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டது. இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசின் இந்த உத்தரவுக்கு அதிகாரிகள், ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன் வழங்கப்பட்ட பணியிட மாற்றங்கள் அனைத்தும் அந்தந்த மாவட்டத்துக்குள் நடைபெறும் எனவும், தற்போது வேறு மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். மேலும், இதுபோன்ற அரசின் செயல் சரியானதல்ல என தெரிவித்த அவர்கள், இந்த உத்தரவை வாபஸ் பெறக்கோரி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கம் சார்பாக மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுராந்தகத்தில் நடந்த போராட்டத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவரும், மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலருமான எஸ்.பரணி, மற்றொரு வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கராஜ், சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் குமார், இணை செயலாளர் ராஜசேகர் உள்பட பலர் பங்கேற்றனர். இதேபோன்று அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சங்கத்தின் மாநில தணிக்கையாளர் சார்லஸ் சசிகுமார் மற்றும் நிர்வாகிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : development offices ,
× RELATED வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் முன்பு...