×

இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கடும் வெயில் எதிரொலி பயிர்களை பாதுகாக்க ஸ்பிரிங்லர் பயன்பாடு அதிகரிப்பு

ஊட்டி, மார்ச் 1: நீலகிாியில் வறட்சி ஏற்பட்டு தண்ணீர் குறைந்த நிலையில், விவசாயிகள் மைக்கோர ஸ்பிாிங்லர் மூலம் தண்ணீா் பாய்ச்சி வருகின்றனா்.நீலகிாி மாவட்டத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை குறித்த சமயத்தில் பெய்தது. அதே சமயம் கடந்த நான்கு மாதங்களாக பனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. கடந்த 3 மாதங்களாக பகலில் வெயிலும், இரவு நேரங்களில் உறைபனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தேயிலை மற்றும் காய்கறி பயிா்கள் கருகின. இதனால், விவசாய பணிகள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது பனிக்காலம் முடியும் தருவாயில், நீலகிாி மாவட்டத்தில் ஓரளவு தண்ணீர் உள்ள பகுதிகளில் மட்டும் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக, ஊட்டி அருகேயுள்ள முத்தோரை பாலாடா, கப்பத்தொரை, கல்லக்கொரை ஆடா, கேத்தி பாலாடா, கொல்லிமலை, முள்ளிக்கொரை, பெர்ன்ஹில் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தங்களின் நிலங்களை சமன்படுத்தி விதைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். தற்போது பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதாலும், வறட்சியால் தண்ணீர் இருப்பு குறைந்துள்ளதாலும், விளை நிலங்களில் பயிாிட்டுள்ள காய்கறி பயிா்களை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு நீா் பாய்ச்சும் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.  கிணறுகளில் உள்ள நீரை மோட்டாா் பயன்படுத்தி மைக்ரோ ஸ்பிாிங்லா் மூலம் காலை மற்றும் மாலை வேளைகளில் நீா் பாய்ச்சி வருகின்றனா்.

Tags : Spirler ,
× RELATED சுற்றுலா பயணிகள் வருகை குறைய வாய்ப்பு