×

மாடியிலிருந்து குதித்து நகை தொழிலாளி தற்கொலை

கோவை, மார்ச் 1:கோவை வெரைட்டி ஹால் ரோடு தெலுங்கு வீதியை சேர்ந்தவர்  ஜெயவிக்னேஷ் குமார்(31). நகை பட்டறை தொழிலாளி. இவரது மனைவிக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு குழந்தை பிறந்தது. மனைவியும், குழந்தையும் மாமனாரின் வீட்டில் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஜெயவிக்னேஷ் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் நேற்று முன் தினம் வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். வெரைட்டி ஹால் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணுவ வீரர்கள் தியாகத்தை அரசியலுக்கு பயன்படுத்துவதா?
கோவை, மார்ச் 1: ராணுவ வீரர்களின் தியாகத்தை அரசியலுக்கு பயன்படுத்தாதீர்கள் என அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் பேசினார்.
கோவை மாநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தேர்தல் ஆலோசனை கூட்டம் ஆர்.எஸ்.புரத்தில் நேற்று நடந்தது. மாநில செயல்தலைவர்கள் மயூரா ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் பேசியதாவது:புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டபோது அதை எதிர்த்து முதன் முதலில் குரல் கொடுத்தவர் ராகுல்காந்தி. ஆனால், அப்போது பிரதமர் நரேந்திர மோடி போட்டோ ஷூட்டிங்கில் இருந்தார். வீரர்களின் உடல் டெல்லி கொண்டுவரப்பட்டபோது முதலில் வந்து அஞ்சலி செலுத்தியவரும் ராகுல்காந்திதான். ஆனால், பிரதமர் மோடி மூன்றரை மணி நேரம் தாமதமாக வந்து அஞ்சலி செலுத்தினார். தீவிரவாதத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியைப்போன்று ேவறு எந்த கட்சியும் குரல் கொடுத்தது இல்லை.  

இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோர் தீவிரவாதத்தால் தங்களது இன்னுயிரை இழந்தார்கள். இந்திய எல்லையில் பதற்றமான சூழல் நிலவுவதால் காங்கிரஸ் காரியகமிட்டி கூட்டத்தை ராகுல்காந்தி தள்ளிவைத்துள்ளார். ஆனால், நரேந்திரமோடி செயலி அறிமுக விழாவில் கலந்துகொள்கிறார்.  ராணுவ வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி, அரசியல் லாபத்துக்காக பயன்படுத்துகிறார். இது, கண்டனத்துக்குரியது. மக்கள் விரோத பாரதிய ஜனதா ஆட்சிக்கு முடிவு கட்டும் ேநரம் நெருங்கிவிட்டது. இவ்வாறு சஞ்சத் தத் பேசினார்.

Tags : terrace ,jewelry worker ,
× RELATED பெங்களூரு அருகே பேடர்ஹள்ளி பகுதியில்...