×

திருவில்லிபுத்தூர் அருகே மின்னல் தாக்கி பால் வியாபாரி படுகாயம்

திருவில்லிபுத்தூர், மார்ச் 1: திருவில்லிபுத்தூர் அருகே பால் கறக்கும் போது மின்னல் தாக்கியதில் பால் வியாபாரி படுகாயமடைந்தார். திருவில்லிபுத்தூர் அருகே அச்சங்குளம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பால் பண்ணையில் அதே பகுதியை சேர்ந்த சிவபாலன்(36) என்பவர் நேற்று மாலை வழக்கம் போல் பால் கறந்து கொண்டிருந்தார். அப்ேபாது இடி, மின்னலுடன் மழை பெய்தது.திடீரென சிவபாலன் பால் கறந்துகொண்டிருந்த இடத்தின் அருகே உள்ள வேப்பமரத்தில் இடி, மின்னல் தாக்கியதில் சிவபாலனுக்கும் தலையில் படுகாயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் அவரை திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக மல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : lightning striker ,merchant ,Srivilliputhur ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை சரணாலயம்: புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்