×

சேக்கிபட்டியில் களைகட்டிய 300 வருட பழமையான திருவிழா இன்று மஞ்சுவிரட்டு

மேலூர், மார்ச் 1:  மேலூர் அருகே 300 வருட பழமையான முத்தாலம்மன் கோயில் மாசி திருவிழா 3 நாட்களாக திரளான பகத்தர்களுக்கு இடையே நடைபெற்று வருகிறது. மேலூர் அருகே சேக்கிபட்டியில் முத்தாலம்மன் கோயில் உள்ளது. 300 வருட பழமையான இக்கோயிலில் மாசி திருவிழா நேற்று முன்தினம் மாலை தோரண மூங்கில் ஊன்றிய பிறகு துவங்கியது. சின்னண்ணன் பெரியண்ணன் சாமி குதிரை எடுப்பை தொடர்ந்து மந்தையில் கரகாட்டம் நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக நேற்று அதிகாலை 4 மணியளவில் முத்தாலம்மன் அலங்கரிக்கப்பட்டு சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனை தொடர்ந்து நேற்று பகலில் பக்தர்கள் மாவிளக்கு, பால்குடம், அக்னி சட்டி எடுத்தல் என தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். மதியம் கிடா வெட்டி பொங்கலிடப்பட்டது. மாலை பெண்கள் கும்மி கொட்டினர். இதனை தொடர்ந்து அம்மன் பூஞ்சோலை சென்றடையும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முத்தாய்ப்பாக இன்று கிராமம் சார்பில் மஞ்சுவிரட்டு நடைபெற உள்ளது.

Tags : festival ,
× RELATED கோயில் திருவிழாவில் இரு...