×

மெரிட் மெட்ரிக். பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

அம்பை, பிப். 28:  அம்பை மெரிட் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. மாணவி கவுரி வரவேற்றார். தென்காசி கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் விஜயலெட்சுமி எல்கேஜி மாணவர்களுக்கும்,  அம்பை நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் யுகேஜி மாணவர்களுக்கும், வட்டார கல்வி அலுவலர் இளமுருகன் முதலாம் வகுப்பு மாணவர்களுக்கும் பட்டயம் வழங்கி பாராட்டி பேசினர். நிகழ்ச்சியில் மாணவர்கள் உருவாக்கிய கண்காட்சி மற்றும் கலைநிகழ்ச்சி, யோகா, கரடிபாத் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மழலையர்களுக்கு மெரிட் கல்வி குழுமங்களின் தாளாளர் சுப்பிரமணியன் பரிசு வழங்கினார்.விழாவில் முதன்மை முதல்வர் நாகலெட்சுமி, முதல்வர் மாடசாமி, துணை முதல்வர் ஆறுமுகம், பயிற்சியாளர் அருள்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர். மாணவி இந்து ஹாசினி நன்றி கூறினார்.


Tags : Kindergarten graduation ceremony ,school ,
× RELATED மயிலாடுதுறையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்