×

களக்காடு அருகே ஆடுகள் திருட்டு

களக்காடு, ஜூன் 19: களக்காடு அருகேயுள்ள கீழக்காடுவெட்டி பிள்ளையார்கோயில் தெருவை சேர்ந்தவர் துரைராஜ் (70). இவர் 70க்கும் மேற்பட்ட ஆடுகளை பராமரித்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று ஆடுகளை அப்பகுதியில் மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றார். அப்போது பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் 2 ஆடுகளை திருடினர். பின்னர் திருடிய ஆடுகளை பைக்கில் ஏற்றி கடத்தி சென்றனர். இதைப்பார்த்த துரைராஜ் சத்தம் போட்டார். எனினும் மர்ம நபர்கள் ஆடுகளுடன் தப்பி சென்று விட்டனர். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆடுகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post களக்காடு அருகே ஆடுகள் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Kalakadu ,Kalakkadu ,Durairaj ,Keezakaduvetti Pillaiarkoil Street ,
× RELATED களக்காடு அருகே ஊச்சிகுளம் கிராமத்தில் யானை தந்தங்கள் பறிமுதல்: 6 பேர் கைது