×

சிஐடியூ மின் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி, பிப்.28: திருச்சி மன்னார்புரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஐபிடிஎஸ் பணிகளுக்கென்று தனியாக நிதி ஒதுக்கப்பட்டும் அந்த நிதியை பயன்படுத்தாமல் நிரந்தர ஊழியர்களை நிர்ப்பந்தப்படுத்தி பணியில் ஈடுபடுத்துவதை நிறுத்த வேண்டும். சம்பளமில்லாமல் பணிபுரியும் பகுதிநேர பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றுவது.  1.10.2018 முதல் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து பணப்பயன்களையும் உடனடியாக வழங்க வேண்டும்.

சொந்த செலவில் அடையாள அட்டை அணியவேண்டும் என நிர்பந்திக்காமல் வாரியமே அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் திரு்சசி பெருநகர் வட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சிஓடிஇஇ மாநில துறை தலைவர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். சார்லஸ், சுப்ரமணியன், சாந்தி, ராதா, ஜான்பாஸ்கோரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சிஓடிஇஇ மாநில செயலாளர் பன்னீர்செல்வம், திட்ட செயலாளர் செல்வராசு, கோட்ட செயலாளர்கள் பழனியாண்டி, ரவிச்சந்திரன், ரியாஜுதீன் ஆகியோர் விளக்கவுரையாற்றினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  நடராஜன் நன்றி கூறினார்.

Tags : CITU ,protestors ,
× RELATED சீராக வழங்க கோரிக்கை பொன்னமராவதியில் மே தின விழா கொண்டாட்டம்