×

சாலை வளைவில் மெகா பள்ளம்

முஷ்ணம், பிப். 28:  வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் எதிரே சாலையோர வளைவில் உள்ள மெகா பள்ளத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். முஷ்ணம் வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் எதிர்புறம் முஷ்ணம் சிதம்பரம் செல்லும் சாலை அமைந்துள்ளது. இச்சாலையை கடந்து, தினமும் அரசு பேருந்து, பள்ளி வாகனம், கனரக வாகனம், இருச்சக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் செல்கிறது. இந்த சாலை வளைவு பகுதியாக உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இப்பகுதியருகே அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருந்தகம், காவல்நிலையம், பள்ளி, கல்லூரி ஆகியவை உள்ளதால் இச்சாலை முக்கிய பகுதியாக உள்ளது. இந்த சாலை வளைவில், மெகா பள்ளம் உள்ளதாலும், தடுப்பு சுவர் இல்லாததாலும் வாகன ஓட்டிகள் தினமும் விபத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். எனவே பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் நலன் கருதி, சாலையோரத்தில் உள்ள மெகா பள்ளத்தை மூட வேண்டும். மேலும், தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ramp ,
× RELATED விவசாயிகள் ஏமாற்றம் பைபாஸ் சாலை வளைவு...