×

ஊத்துக்கோட்டையில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளுக்கு அபராதம்

ஊத்துக்கோட்டை, பிப்.28: ஊத்துக்கோட்டையில் போக்குவரத்து நிறைந்த சாலைகளில் சுற்றித்திரிந்த 14 மாடுகளை பேரூராட்சி நிர்வாகம் பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு  அபராதம் விதித்தது. ஊத்துக்கோட்டை பேரூராட்சி தமிழ்நாடு - ஆந்திரா எல்லைகளை இணைக்கும் முக்கிய இடமாக விளங்குகிறது. இதனால், ஊத்துக்கோட்டை பகுதி தொடர் வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது. இந்த நிலையில், ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் கடந்த சில மாதங்களாக மேச்சலுக்காக அவிழ்த்துவிடும் மாடுகள், சாலைகளில் சுற்றித்திரிகிறது. அதுமட்டுமின்றி சாலையின் குறுக்கே திடீர், திடீரென ஓடுகிறது. அப்போது இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் மாட்டின் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றனர். மேலும், மாணவ - மாணவிகள் மாடுகள் முட்டி விடுமோ என்ற அச்சத்துடன் பள்ளிக்கு சென்று வந்தனர்.

அதுமட்டுமல்லாமல்  நடைபாதை காய்கறி கடைகாரர்கள், தாங்கள் விற்பனை செய்யும் காய்கறிகளை மாடுகள் தின்றுவிடுமோ என்ற அச்சத்தில் மாடுகளை அதனால் அவர்கள் காயமடைகிறார்கள். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் சென்றது. அதை தொடர்ந்து காலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின் பேரில் ஊத்துக்கோட்டை செயல் அலுவலர் ஜெயக்குமார், பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசார் நேற்று பஜார் பகுதிக்கு சென்று அங்கு சுற்றித்திரிந்த 14 மாடுகளை பிடித்து பழைய பேரூராட்சி பின்புறம் உள்ள உரக்கிடங்கில் அடைத்தனர். பின்னர் தகவல் அறிந்து, மாடுகளை மீட்க வந்த உரிமையாளர்களிடம் மாடுக்கு தலா ரூ.500 என 14 மாடுகளுக்கு 7 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், மாட்டின் உரிமையாளர்களிடம் மீண்டும் மாடுகள் சாலையில் திரிந்தால் கோசாலையில் ஒப்படைக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகத்தினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Tags : road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி