×

மதுராந்தகம் நகராட்சி மொச்சேரி பகுதியில் கால்வாய் அடைப்பால் தேங்கி நிற்கும் கழிவுநீர்

மதுராந்தகம், பிப்.28: மதுராந்தகம், மொச்சேரி பகுதியில் சாலையோர கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் பல நாட்களாக தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதி மக்கள், துர்நாற்றம் தாங்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். இதில் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மதுராந்தகம் நகராட்சி மோச்சேரி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள தெருக்களில் திறந்தநிலை கால்வாய்கள் உள்ளன. இந்த கால்வாய்கள் அமைத்தபோது, அதில் வரும் கழிவுநீரை பெரிய கால்வாய்களில் இணைக்கும் விதத்தில் அமைக்காமல், தனியார் நிலங்களில் செல்வதுபோல அறைகுறையாக அமைத்துள்ளனர்.
இதனால், தனியார் நில உரிமையாளர்கள் கழிவுநீர் வரும் பாதையை அடைத்துவிட்டனர். இதையொட்டி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கால்வாய்களிலேயே தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி, பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி மதுராந்தகம் நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கண்டும் காணாமல் உள்ள என அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நகராட்சி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், எங்கள் பகுதி குறித்து புகார் மனுக்களை அளித்துள்ளோம். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும்
 இல்லை.  கால்வாய்களில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், வீடுகளில் மக்கள் வசிக்க முடியாத அளவுக்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. தெருக்களில் விளையாடும் குழந்தைகள், தேங்கி நிற்கும் கழிவுநீரில் அவ்வப்போது விழும் நிலையும் உள்ளது. எனவே அதிகாரிகள் மேலும் காலம் தாழ்த்தாமல், இந்த கால்வாயில் தேங்கயுள்ள கழிவுநீர் வெளியேற உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

Tags : municipality ,
× RELATED போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த...