×

மதுரை வருகிறது பிகானீர்

மதுரை, பிப்.28: தெற்கு ரயில்வே விடுத்துள்ள அறிக்கை: பிகானீரிலிருந்து சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்பட்டு வந்த, வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 22632) மதுரை வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் சென்னை சென்ட்ரலுக்கு பதிலாக, எழும்பூர் சென்று அங்கிருந்து மதுரை புறப்பட்டுச் செல்லும். மறு மார்க்கத்தில் மதுரையிலிருந்து புறப்படும் ரயில் (வண்டி எண் 22631) சென்னை எழும்பூர் வந்து அங்கிருந்து, பிகானீர் புறப்பட்டுச் செல்லும். இந்த நீடிப்பு செய்யப்பட்ட ரயில், இன்று(பிப்.28) மதுரையிலிருந்து புறப்படுகிறது. வரும் மார்ச் 3ம் தேதி பிகானீர் சென்று சேரும். இவ்வாறு அறிக்கையில் கூறுப்பட்டுள்ளது.

Tags : Madurai ,Bikaner ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை