×

குஜிலியம்பாறை அருகே கல்வி சீர்வரிசை வழங்கி கிராமத்தினர் அசத்தல்

குஜிலியம்பாறை, பிப். 28: குஜிலியம்பாறை அருகே பள்ளி மாணவர்களுக்கு கல்வி சீர்வரிசை பொருட்கள் வழங்கி கிராமமக்கள் அசத்தியுள்ளனர்.
குஜிலியம்பாறை அருகே சேவகவுண்டனூரில் ஊராட்சி துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு 21 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஒரு தலைமை ஆசிரியை, ஒரு உதவி ஆசிரியை என 2 பேர் பணிபுரிகின்றனர். இந்நிலையில் கிராமமக்கள் ஒன்று சேர்ந்து அவரவர் பங்களிப்புடன் இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பயன்பாட்டிற்கு கல்வி சீர்வரிசை பொருட்கள் வழங்க முடிவு செய்தனர். அதன்படி நேற்று கிராமமக்கள் சார்பில் பிளாஸ்டிக் நாற்காலிகள், கண்ணாடி, டிபன்பாக்ஸ், பாய், சில்வர்குடம், பென்சில்கள்,

சாக்பீஸ், கடிகாரம், குப்பை கூடை, விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட கல்வி சீர்வரிசை பொருட்கள் பள்ளிக்கு வழங்கப்பட்டது. இத தவிர ஊர் முக்கியஸ்தர்கள் 6 பேர் சேர்ந்து கல்வி வளர்ச்சி நிதியாக ரூ.5000 வழங்கினர். இந்நிகழ்ச்சியில் வட்டார கல்வி அதிகாரி சந்தியா, ஆசிரியைகள் மகாலெட்சுமி, கலைவாணி, பாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர் பெருமாள், ஊர்முக்கியஸ்தர்கள் சேவன், சுப்பிரமணி, தங்கவேல், பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Gujuliyambaram ,
× RELATED குஜிலியம்பாறை அருகே ‘சாலையை காணவில்லை’ போஸ்டரால் பரபரப்பு