×

குஜிலியம்பாறை அருகே ‘சாலையை காணவில்லை’ போஸ்டரால் பரபரப்பு

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை அருகே ஆக்கிரமிப்பால் காணாமல் போன சாலையை மீட்டு தர கோரி போஸ்டர் ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜிலியம்பாறை ஒன்றியம், பாளையம் பேரூராட்சி 6வது வார்டுக்குட்பட்டது சிலும்பாக்கவுண்டனூர். குஜிலியம்பாறையில் இருந்து பாளையம் செல்லும் மெயின் ரோட்டின் பிரிவு சாலையில் இருந்து 1 கிமீ தொலைவில் இவ்வூர் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பாளையம் பேரூராட்சி சார்பில் இங்கு தார்சாலை அமைக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்து வந்தது. நாளடைவில் தனிநபர் சிலர் ஆக்கிரமிப்பால் தார்சாலை அடையாளமின்றி காணாமல் போனது. இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்நிலையை மாற்றவும், மீண்டும் தார்ச்சாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், ‘தார்சாலையை காணவில்லை’ என்ற போஸ்டர் குஜிலியம்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் ஒட்டப்பட்டுள்ளது. அதில், ‘மக்கள் பயன்பாட்டில் இருந்து காணாமல் போன சாலையை கண்டுபிடித்து தார்சாலை அமைத்து கொடு’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. மேலும் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் வரும் ஜூலை 10ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிலும்பாகவுண்டனூர் பிரிவில் மறியல் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பால் காணாமல் போன தார்ச்சாலையை மீட்டு கொடுகக் கோரி போஸ்டர் ஒட்டியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : road ,Gujuliyambaram , Road, Poster
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி