×

நிப்ட்-டீ கல்லூரி ஆண்டு விழா

திருப்பூர், பிப். 27:திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்-டீ பின்னலாடை வடிவமைப்பு கல்லூரியில் பேஷன்-2019 ஆண்டு விழா நேற்று நடந்தது. திருப்பூர், முதலிபாளையம் நிப்ட்-டீ பின்னலாடை வடிவமைப்பு கல்லூரியில் பேஷன் -2019 ஆண்டு விழா நடந்தது. கல்லூரியின் சேர்மன் முருகானந்தம் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். கல்லூரி துணை முதல்வர் தயாளராஜன் ஆண்டறிக்கை வாசித்தார். இதில், கல்லூரி நிர்வாகத்தின் துணை தலைவர் பழனிசாமி, திருப்பூர் கிளிப்டன் ஏற்றுமதி நிறுவனத்தின் வடிவமைப்புத்துறை தலைவர் ஜெயசந்திரன் கலந்து கொண்டார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரைப்பட இயக்குனர் கீர்த்தி வாசன் பேசுகையில், ‘‘கும்பகோணத்தில் ஒரு கிராமத்தில் அரசு பள்ளியில் படித்து பிறகு அங்கிருந்து திருப்பூர் வந்து நிப்ட்-டீ கல்லூரியில் சேர்ந்து டிசைனிங் படித்தேன். பல்வேறு போட்டிகளுக்கும் போராட்டங்களுக்கும் இடையே வளர்ந்து வருகிறேன். இங்கு நான் கற்றுக் கொண்டவை எனது தொழிலில் மிகுந்த நம்பிக்கை வழங்கி வருகிறது.  திறமையுள்ள மாணவர்கள் உலகில் எங்கு சென்றாலும் வாய்ப்புகளை உருவாக்க முடியும். திறனை வளர்த்து கொண்டு வாழ்வில் மாணவர்கள் நல்ல நிலைக்கு வரவாழ்த்துகிறேன்’ என்றார். தொடர்ந்து 2018-19ம் கல்வி ஆண்டில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினர். மேலும் மாணவர்களுக்கு இடையே நிறங்களை அடிப்படையாக வைத்து குழுக்கள் பிரிக்கப்பட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மஞ்சள் அணி ஒட்டுமொத்த சாம்பியன்சிப் பெற்றது. இறுதியில் ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி நன்றி கூறினார்.

Tags : Nift ,festival ,
× RELATED திருப்பூரில் களிமண் மற்றும் அட்டையை...