×

தொட்டபெட்டா காட்சி கோபுரத்தில் வர்ணம் தீட்டும் பணி தீவிரம்


ஊட்டி, பிப். 26: கோடை சீசனுக்கு தயாராகும் வகையில் தொட்டபெட்டா மலை சிகரத்தில் உள்ள காட்சி கோபுரத்தை சீரமைத்து வர்ணம் தீட்டி பொலிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
 நீலகிரி மாவட்டம் சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. இங்கு  சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா, பைக்காரா படகு இல்லம், தொட்டபெட்டா காட்சி முனை உள்ளிட்ட  சுற்றுலா தளங்களும் உள்ளன.  இந்நிலையில் இந்தாண்டு கோடை சீசனுக்காக மாவட்டத்தில் உள்ள பூங்காக்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக ஊட்டி - கோத்தகிரி சாலையில் அமைந்துள்ள தொட்டபெட்டா மலைசிகரத்திலும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  தொட்டபெட்டாவில் டெலஸ்கோப் அமைந்துள்ள காட்சி கோபுரத்திலும், வர்ணம் தீட்டி பொலிவுபடுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோடை சீசன் முன்னிட்டு காட்சி முனைக்கு செல்லும் நடைபாதையில் உடைந்து காணப்படும் கற்களையும் சீரமைக்க வேண்டும். குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் தொட்டபெட்டா சாலையையும் சீரமைக்க வேண்டும் சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.


Tags : display tower ,Dodabetta ,
× RELATED தொட்டபெட்டா சாலை மூடப்பட்டதால்...