கும்பகோணம், பிப். 26: கும்பகோணம் ஆர்டிஓ அலுவலகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் அலுவலகம் சார்பில் விடுதி மாணவர்களுக்கான சிறப்பு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரத்னாதேவி தலைமை வகித்தார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். வேலைவாய்ப்பு உதவி கணக்கு அலுவலர் முத்துக்குமரன், மாவட்ட வேலைவாய்ப்பு கணக்காளர் புவனேஸ்வரி சிறப்புரையாற்றினர். கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் பகுதிகளில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சிறுபான்மையினர் விடுதியில் உள்ள 120 மாணவர்கள் பங்கேற்றனர். வேலைவாய்ப்பு அலுவலக இளநிலை அலுவலர் குழந்தைவேலு
நன்றி கூறினார்.
