×

இறந்தவர் பெயரில் இருந்த நிலத்தை போலி பத்திரம் மூலம் இடம் விற்றவர் கைது

சிவகங்கை, பிப். 26: இறந்தவர் பெயரில் இருந்த நிலத்தை போலி பத்திரம் மூலம் விற்பனை செய்த வழக்கில் மேலும் ஒருவரை மாவட்ட குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர். தேவகோட்டை அருகே மேலசெம்பொன்மாரி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பன். இவருக்கு தேவகோட்டை அருகே உஞ்சனை கைகாட்டி அருகே ஒன்றே முக்கால் ஏக்கர் நிலம் உள்ளது. சுப்பன் கடந்த 30.10.1999ம் ஆண்டு இறந்து போனார். இந்நிலையில் தேவகோட்டை புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த சிவகுமார்(45) உள்பட சிலர் கடந்த 10.05.2018ம் தேதியன்று சுப்பன் விற்பனை செய்தது போல தேவகோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் கிரைய பத்திரம் பதிவு செய்தனர். பின்னர் அந்த இடத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளனர்.

இது குறித்து சுப்பனின் மகன் செல்லக்கண்ணு சிவகங்கை எஸ்பி ஜெயச்சந்திரனிடம் புகார் அளித்தார். எஸ்பி உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சிவக்குமாரை ஏற்கனவே கைது செய்திருந்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய மேலசெம்பொன்மாரி கிராமத்தை சேர்ந்த முரசொலி(43) என்பவரை குற்றப்பிரிவு போலீஸ் அல்லிராணி தலைமையிலான போலீசார் நேற்று கைது செய்தனர்.

Tags : owner ,deceased ,pseudonym ,
× RELATED பார் உரிமையாளர்களிடம் ரூ.25 கோடி லஞ்சம்:...