×

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

கடலூர், பிப். 26:கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வம் விடுத்துள்ள செய்திகுறிப்பு: திருச்சி, அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஐ.டி.ஐ முடித்தவர்களுக்கான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நாளை 27ம் தேதி நடக்கிறது. தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக திருச்சி மண்டல அளவில் தொழில்பழகுனர் தேர்வு நடைபெற உள்ளது. இம்முகாமில் மத்திய அரசு நிறுவனங்கள், மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் முன்னனி நிறுவனங்களும் பங்கேற்று 1500க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளனர். இதில் பங்கேற்று தேர்வு பெறுவதன் மூலமாக உலக அளவில் அங்கீகாரம் பெற இந்திய அரசின் தொழிற்பழகுநர் சான்றிதழ் அளிக்கப்படும். ஐ.டி.ஐ  மட்டும் முடித்து தேசிய தொழிற்சான்றிதழ் பெற்றவர்கள் கூடுதல் முன்னுரிமை பெற்றவராக அறியப்படுவர்.

தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெற்றவருக்கு அரசு மற்றும் தனியார் நிறுனங்களில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெற்றோருக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படுகிறது. தற்போது தொழிற்பழகுநருக்கான உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளதால் ரூ.7ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை பயிற்சி காலத்தில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேறிய மற்றும் தவறியவர்களும் தங்களது விவரங்ளை பதிவு செய்து முகாமில் பங்கேற்கலாம். எனவே அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழிற்பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் உரிய சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் (அசல் மற்றும் நகல்) முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம் என்று தெரிவித்துள்ளார்.

Tags : Professional Admission Camp ,Government Vocational Training Center ,
× RELATED செங்கல்பட்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கலெக்டர் ஆய்வு