உசிலையில் இன்று மின்குறைதீர் கூட்டம்

மதுரை, பிப்.26:  உசிலம்பட்டி மின் கோட்டத்தை சேர்ந்த மின் நுகர்வோர்களுக்கான  குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (பிப்.26) காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை நடக்கிறது. உசிலம்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கும் இக்கூட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் பிரீடா பத்மினி கலந்து கொண்டு குறைகளை கேட்கிறார். எனவே இக்கோட்டத்தை சார்ந்த மின் நுகர்வோர்கள், இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்களது மின்நுகர்வு தொடர்பான குறைகளை நேரில் தெரிவித்து பயன்பெறலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>