×

செய்துங்கநல்லூர் அருகே காட்டுப்பகுதியில் மர்மநபர்களால் கொட்டப்பட்ட மருத்துவகழிவுகள்

செய்துங்கநல்லூர், பிப். 26:  செய்துங்கநல்லூர் அருகே  தெற்கு காரசேரியில் காட்டுப்பகுதியில் மர்மநபர்களால் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளால் சுகாதாரகேடு நிலவுகிறது.
தூத்துக்குடி மாவட்டம், தெற்கு காரசேரி ஊருக்கு எல்கையில் காட்டுக்குள் கல் குவாரி ஒன்று  உள்ளது. அந்த கல்குவாரியில் தோண்டப்பட்ட  குழியில் பல்வேறு லாரிகளில் கொண்டுசென்று கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரகேடு நிலவுகிறது. மேலும் சில இடங்களில்  நடந்து செல்லும் பாதை அருகிலேயே கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது.  இதுகுறித்து இந்த ஊரை சேர்ந்த ஊய்காட்டான் என்பவர் கூறுகையில், ‘‘எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் விவசாய வேலை மட்டுமே செய்து வருகின்றனர். எங்கள் ஊருக்கு மேற்கே அடர்ந்துள்ள காட்டின் அருகே கல்குவாரி உள்பட பல்வேறு தொழில்கள் நடந்து வந்தன. இதனிடையே கடந்த 10 நாட்களாக பல்வேறு லாரிகளில் மருத்துவக் கழிவுகளை  மர்ம நபர்கள் கொண்டுவந்து இங்கு கொட்டிச் செல்கின்றனர். இத்தகைய கழிவுப்பொருள்கள் சாக்கில் கட்டப்பட்டு  மக்கிய நிலையில் உள்ளதால் அருகில் செல்லும் போது துர்நாற்றம் வீசுவதோடு மக்களுக்கு நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே, மருத்துவக் கழிவுகளை உடனடியாக அகற்றுவதோடு இதில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Doctors ,Nallangur ,Nallur ,
× RELATED புனேவில் கார் விபத்தை ஏற்படுத்திய...