×

தென்மாவட்ட சிலம்ப போட்டி கோவில்பட்டி கரிதா பப்ளிக் பள்ளி வெற்றி

கோவில்பட்டி, பிப். 22:கோவில்பட்டியில் தென்மாவட்ட அளவில் நடந்த சிலம்ப  போட்டியில் வெற்றிபெற்ற கரிதா  பப்ளிக் பள்ளி மாணவர்கள் பாராட்டப்பட்டனர். கோவில்பட்டி  எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் டபிள்யூபிஏஎஸ்  ஸ்போர்ட்ஸ் சர்வீஸ் சென்டர் சார்பில் தென்மாவட்ட அளவில் பள்ளி மாணவ,  மாணவி களுக்கான சிலம்ப  போட்டி நடந்தது. இதில் ஆர்வமுடன் பங்கேற்ற கோவில்பட்டி கரிதா பப்ளிக் பள்ளி மாணவ,  மாணவிகள் வெற்றிபெற்று சான்றிதழ், பரிசு கோப்பை  வென்றனர். மேலும்  இப்பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான பரிசு கேடயமும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளியில் நடந்த விழாவில், சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளர் காசிராஜன், பள்ளி  முதல்வர் லில்லிஜோ அன், ஆசிரியர்கள் சங்கரி, ரேணுகா, சீனிப்ரியா,  ஷைனி, காளீஸ்வரி, எப்சிபா, சுப்புராஜேஸ்வரி, சரண்யா, நர்மதா,  பேச்சியம்மாள், சுதா, அன்னலட்சுமி, சுபா உள்ளிட்ட ஏராளமானோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

Tags : winner ,Kavilpatti Karitha Public School ,Southamawatta Chinna Competition ,
× RELATED கரூரில் அதிமுக-வினர் பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா!!