×

மணல் குவாரி துவங்க கோரி மாட்டு வண்டி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

தா.பழூர், பிப். 22: மணல் குவாரி துவங்க கோரி மாட்டு வண்டி உரிமையாளர்கள் சங்கத்தினர் ெஜயங்கொண்டத்தில் மார்ச் 1ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.அரியலூர் மாவட்டம் தா.பழூர் கிராமத்தில் மாட்டுவண்டி உரிமையாளர்கள் சங்க பேரவை கூட்டம்  சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது விழாவை மாவட்ட செயலாளர் மதியழகன் துவக்கி வைத்தார். .மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இளங்கோவன் வாழ்த்தி பேசினார். தமிழ்வாணன் வெங்கடாசலம் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பாரம்பரியமான மாட்டுவண்டி தொழிலையும் தொழிலாளர்களையும் பாதுகாத்திடவேண்டும்.என அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்த நிலையில்  தாசில்தார் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.இதில் பொதுப்பணிதுறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதில் 2 மாதத்திற்குள் மணல் குவாரி அமைப்பதாக கூறியிருந்தனர் தற்பொழுது 3 மாத காலம் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.உடடியாக உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தத்தை அமல்படுத்தி மணல்குவாரி தொடங்கிவிடவேண்டும், தொகுப்பு வீடுகளுக்கு மாட்டு வண்டியில் மணல் அள்ள பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்றும் வரும் மார்ச் 1ம் தேதி  அன்று ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகம் முன்பு மணல் குவாரி துவங்கிட வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பது  உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Demonstrators ,
× RELATED புகுஷிமா அணு உலை விபத்து: ஜப்பான்...