×

ஜெயமங்கலம் பகுதியில் நெல் அறுவடை தீவிரம்

தேவதானப்பட்டி, பிப். 22:  தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலம், சில்வார்பட்டி, நாகம்பட்டி, நல்லகருப்பன்பட்டி, மேல்மங்கலம், குள்ளப்புரம், உள்ளிட்ட இடங்களில் நெல் அறுவடை பணி தீவிரம் அடைந்துள்ளது. இந்த பகுதியில் என்எல்ஆர், கோ45 உள்ளிட்ட ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த மகசூல் குறைந்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். வழக்கம்போல் ஒரு ஏக்கருக்கு 2.5 முதல் 3.5டன் வரை மகசூல் கிடைக்கும். ஆனால், நடப்பாண்டில் ஒரு ஏக்கருக்கு 2 முதல் 2.4டன் வரை அதிக மகசூல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் நடப்பாண்டில் சாகுபடிக்கு அதிக செலவினங்கள் செய்யப்பட்டுள்ளது. ஒரு கிலோ நெல்லை அரசு ரூ.16.80 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறது.  வயல்களில் நேரடியாக வியாபாரிகள் வந்து ஒரு கிலோ ரூ.16.50 ரூபாய்க்கு எடுத்துச்செல்கின்றனர். தற்போது இந்த விலை கட்டுபடியாகவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர். அதிக செலவு செய்து குறைந்து மகசூலால் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, அரசு நெல் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,Jayamangalam ,
× RELATED குஜராத் ராஜ்கோட் பகுதியில் வணிக வளாக...