×

திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் 10ம் நாள் தெப்போற்சவம்

திருப்போரூர், பிப்.21: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் மாசி பிரம்மோற்சவம் கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து கடந்த 16ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து, கோயிலை ஒட்டி உள்ள சரவணப்பொய்கையில் மாசி மாத தெப்ப உற்சவம் நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி 3 முறை குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு வழிபட்டனர்.
* கேளம்பாக்கம்  அடுத்த கொளத்தூர் கிராமத்தில் புகழ் பெற்ற கல்யாண ரங்கநாதப் பெருமாள் கோயில் உள்ளது.  இந்த கோயிலில் மாசி மாத தெப்ப உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் தேவி, பூதேவி சமேதராக கல்யாண ரங்கநாதப் பெருமாள் எழுந்தருளி 3 முறை குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு கோவிந்தா கோஷம் எழுப்பி பெருமாளை வழிபட்டனர்.
கோயில் விழாக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Kanthaswamy temple ,
× RELATED திருப்போரூர் சிதம்பர சுவாமி மட...