×

காவேரி நகர் ரவுண்டானாவை சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

குமாரபாளையம்,பிப்.21:  குமாரபாளையம் காவேரி நகர் ரவுண்டானாவில் கனரக வாகனம் மோதி சேதமடைந்த  சில்வர் பைப்பை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல்  மாவட்டம் குமாரபாளையத்தில் இருந்து பவானி செல்லும் வழியில் காவேரி நகர்  பாலத்தின் அருகே உள்ள மூன்று சாலை பிரிவில் விபத்துக்களை தடுக்க  ரண்டானாவும், உயர்மின் கோபுரமும் அமைக்கப்பட்டது. இந்த உயர்மின் கோபுரத்தை  சுற்றிலும் பாதுகாப்பிற்காக சில்வர் பைப் பதிக்கப்பட்டது.  இந்நிலையில்  கடந்த சில மாதங்கள் முன்பு, கனரக வாகனம் மோதியதில் ரவுண்டானாவும், உயர்மின்  கோபுரத்தின் சில்வர் பைப்பும் சேதமாகி விட்டது. இதை சீரமைக்க வேண்டும் என  நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும்  எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags : Kaveri Nagar Roundana ,
× RELATED நாமக்கல் பஸ் நிலையத்தில் அலைமோதிய பயணிகள்