×

போதை பொருள் விழிப்புணர்வு பேரணி

நாமக்கல், பிப்.21: நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் போதைப் பொருள் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. இதில் தனியார் கல்லூரிகளை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர். பேரணியை கலெக்டர் ஆசியாமரியம் கொடியசைத்து துவக்கி வைத்து கலந்து கொண்டார். அரசு மருத்துவமனையில் துவங்கிய பேரணி பேருந்து நிலையம், மணிக்கூண்டு, திருச்சி சாலை வழியாக மீண்டும் அரசு மருத்துவமனையை வந்தடைந்தது. இப்பேரணியில் கள்ளச்சாராயம் அருந்துவதால் கண் பார்வை பாதிக்கப்படும், உயிரிழப்பு ஏற்படும், போதையில் வாகனம் ஓட்டக்கூடாது, கள்ளச்சாராயம் ஓர் உயிர்க்கொல்லி, கள்ளச்சாராயத்தை ஒழிப்பதே நாட்டின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளை மாணவிகள் ஏந்திச் சென்றனர். இந்நிகழ்ச்சியில் சப்கலெக்டர் கிராந்தி குமார்பதி, உதவி ஆணையர் (கலால்) இலாஹிஜான், நாமக்கல் தாசில்தார் செந்தில்குமார், ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்கண்ணன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Drug awareness rally ,
× RELATED பெரியபாளையத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி