×

கண்காணிக்க தனிக்குழுவும் அமைப்பு திண்டுக்கல்- கரூர் ரோட்டில் சப்வே அமைக்க தோண்டும் பள்ளங்களில் குழாய் உடைப்பு

திண்டுக்கல், பிப். 21: திண்டுக்கல்- கரூர் ரோட்டின் இடையே பழநி ரயில் தண்டவாளங்கள் குறுக்கிடுகின்றன. அகல ரயில்பாதைக்காக தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டதும் இப்பகுதி போக்குவரத்தில் சிரமம் இல்லாத நிலை இருந்தது. இந்நிலையில் இப்பணி முடிந்தும் பழநி, பாலக்காட்டில் இருந்து ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்ததும் நெரிசலும் அதிகரிக்க துவங்கியது. ஒருநாளைக்கு பலமுறை அடைக்கப்படும் இந்த கேட்டினால் மாணவ, மாணவியர், வேலைக்கு செல்பவர்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்பட்டனர். எனவே மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் பாலம் அமைக்கும் அளவிற்கு இப்பகுதி போக்குவரத்து இல்லை. எனவே சப்வே அமைக்கலாம் என்று நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டது.

இதற்காக பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கியது. தொடர்ந்து இந்த வழி போக்குவரத்து நிறுத்தப்பட்டு திருச்சி ரோடு வழியாக மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் சப்வே அமைப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன. கீழே செல்லும் குழாய் உடைதல், புதைந்து கிடக்கும் தொலைபேசி வயர்கள் என பணியை பாடாய்படுத்தி வருகிறது. தற்போது தோண்டப்பட்ட பள்ளங்களில் கான்கிரீட் தளங்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து பணி நடைபெற்று வருகிறது. சிரமத்துடன் நடந்து வரும் இப்பணிகளால் நேருஜிநகரின் பல பகுதி குடியிருப்புகளுக்கு செல்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. எனவே இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Dindigul-Karur Road ,
× RELATED திண்டுக்கல் வடமலையான்...