×

திண்டுக்கல் வடமலையான் மருத்துவமனையில் 3வது நாளாக சோதனை: வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் வருமானவரித்துறையினர் ஆய்வு..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் கரூர் சாலை ராஜகபட்டி பகுதியில் வடமலையான் மருத்துவமனை உள்ளது. மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட கூடிய இந்த மருத்துவமனை யானது கடந்த சில ஆண்டுகளாக முறையாக வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது.

அதன் அடிப்படையில் கடந்த 9ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் 7பேர் மருத்துவமனையில் உள்ள மருந்தகம், மருத்துவர்களின் அறைகளில் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக மூன்றாவது நாளான இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. காலை முதலே அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனை மற்றும் மறுந்தகத்தின் ஆவணங்களை சரிபார்த்து வருகின்றனர்.

நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு சோதனை நடைபெற்று வருகிறது. இதே போல் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சாலையில் உள்ள சுதா மருத்துவமனையிலும் 3வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள குழந்தைகள் மருத்துவமனையிலும் சோதனை நடைபெறுகிறது. சென்னையில் உள்ள சுதா கருத்தரிப்பு மருத்துவமனையிலும் காலை முதலே அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் 30 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

The post திண்டுக்கல் வடமலையான் மருத்துவமனையில் 3வது நாளாக சோதனை: வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் வருமானவரித்துறையினர் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Tags : Dindigul Vadamalaiyan Hospital ,Dindigul ,Vadamalayan Hospital ,Dindigul Karur Road Rajagapatti ,Madurai ,Dindigul Vadamalayan Hospital ,Tax ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் வடமலையான்...