×

  நீடாமங்கலத்தில் vவிவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நீடாமங்கலம்,பிப்.20: நீடாமங்கலத்தில் ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வேளாண்மை துறை அலுவலகம் முன்பு சாலைமறியல் விளக்க ஆர்ப்பாட்டம்  விவசாய சங்க ஒன்றிய தலைவர் பாரதிமோகன் தலைமையில் நடந்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் தமிழார்வன்,விவசாய சங்க மாவட்ட பொருளாளர் ராவணன்,விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் டேவிட், மணியரசன் உள்ளிட்ட பலர் பேசினர்.இதில் 2017-18ம் ஆண்டிற்கான பயிர்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு முறையாக கணக்கெடுக்காமல்,  பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்காமல் செய்த துறை அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர். இது தொடர்பாக வரும் 25ம் தேதி ஒன்றியம் முழுவதும் சாலை மறியல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

Tags : farmers union ,
× RELATED டெல்டா பகுதியில் விவசாய தேவைக்காக...