×

பாடாலூர் பூமலை சஞ்சீவிராயர் கோயிலில் பவுர்ணமி கிரிவலம்

பாடாலூர், பிப். 20: பாடாலூர் பூமலை சஞ்சீவிராயர் மலைக்கோயிலில் பவுர்ணமி கிரிவலம் நடந்தது.
ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் உள்ள பூமலை சஞ்சீவிராயர் மலைக்கோவிலில் பவுர்ணமி கிரிவல விழா நடந்தது. முன்னதாக மாலை 5 மணிக்கு மலையடிவாரத்தில் பக்தர்கள் ஒன்றுகூடி கிரிவலம் வந்தனர். பின்னர் வழித்துணை ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.பாடாலூர், திருவிளக்குறிச்சி, தெரணி, காரை, விஜயகோபாலபுரம், புதுக்குறிச்சி, நாரணமங்கலம், மருதடி, இரூர், சீதேவிமங்கலம், கூத்தனூர், நாட்டார்மங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.
இதேபோல் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் தண்டாயுதபாணி கோயிலில் பவுர்ணமி கிரிவலம் நடந்தது. முன்னதாக தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் வந்தனர். செட்டிகுளம், சத்திரமனை, பொம்மனப்பாடி, வேலூர், இரூர், பாடாலூர், குரூர், புதுவயலூர், நக்கசேலம், மாவலிங்கை, நாட்டார்மங்கலம், கூத்தனூர், ஆலத்தூர்கேட் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

Tags : temple ,Pooram Kavilavam ,Bhagalpur Bhakthi Sanjiviera ,
× RELATED மே 30-ல் பழனி கோயில் ரோப் கார் சேவை நிறுத்தம்