×

செம்பனார்கோவில் பகுதியில் சாலை ஓரங்களில் அத்துமீறி வளரும் மரங்களால் தொடர் விபத்து விரைவில் அப்புறப்படுத்த கோரிக்கை

செம்பனார்கோவில், பிப்.20: நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அடுத்து கீழையூர் - பொன்செய் சாலை ஓரத்தில் சாலையில் அத்துமீறி வளர்ந்து வரும் மரங்களால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. இதனை விரைந்து அகற்ற  பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  
செம்பனார்கோவில் அடுத்து கீழையூர் - பொன்செய் வழியாக செல்லும் பூம்புகார் சாலையில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள மரங்கள் இருந்து வருகின்றன.  ஒவ்வொரு காலகட்டத்திலும் சாலை அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அதன்படி தற்பொழுது சாலை அகலப்படுத்தியதால் ஏற்கனவே உள்ள பழமை வாய்ந்த மரங்கள் சாலையை ஒட்டியே காணப்படுகின்றன. மேலும் இப்பகுதி சாலை வளைவுகள் அதிகமாக இருப்பதால் வளைவு பகுதியில் பழமை வாய்ந்த பெரிய மரங்கள் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்து வருகிறது. இப்பகுதி கிராமங்கள் நிறைந்த பகுதியாகும். இப்பகுதியில் வசிப்போர் வியாபாரம் செய்வதற்கு செம்பனார்கோவில் பகுதியில்தான் கடைகள் நடத்தி வருகின்றனர்.  மேலும் இங்கு பயிற்சி செய்யும் குறு விவசாயிகள் கீரை, காய்கறிகள் போன்றவற்றை வியாபாரம் செய்ய செம்பனார்கோவிலுக்கு காலையில் வந்து இரவு செல்கின்றனர். இரவு நேரத்தில் வியாபாரம் செய்து வீட்டிற்கு திரும்பும் போது கீழையூர் - பொன்செய் வளைவு சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது எதிர்வரும் கனரக வாகனங்கள் சாலையை அடைத்து முன்னேறுவதால் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகின்றனர். இது வரை சாலை வளைவுகளில் உள்ள மரத்தில் மோதி 4 பேர் பலியாகியுள்ளனர்.  இரவு நேரம் என்பதால் அடிப்பட்டு கிடந்தாலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லக்கூட ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியாக இருந்து வருகிறது.  பலமுறை இப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் சொன்னால் அதிகாரிகள், நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் முடிவு எடுக்க வேண்டும் ஊராட்சிக்கு அதிகாரம் கிடையாது என்று சொல்லி விடுகின்றனர்.  ஒவ்வொரு முறை விபத்தில் பலி ஏற்படும்போது காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காணும்போது மரத்தால் ஏற்படும் பலியை குறைக்க போலீசாரும் சம்பந்தப்பட்ட துறைக்கும் தகவல் கொடுக்கின்றனர். ஆனால் அதற்கும் எந்த பயனுமில்லை. கடந்த 20 நாட்களுக்கு முன்பு செம்பனார்கோவில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடையை நடத்தி வந்தனர். இரவில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதுபோல் இந்த சாலையில் 4 பேர் பலியாகி உள்ளனர்.  இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் மரத்தை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்னர்.

Tags : Sembanarkovil ,region ,crossing ,road ,
× RELATED தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக...