×

செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியத்தில் ஒரு வாரத்தில் காப்பீடு தொகை வழங்கா விட்டால் போராட்டம் திமுக அறிவிப்பு

தரங்கம்பாடி, பிப்.20:  செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியத்தில் ஒரு வாரத்தில் காப்பீடு தொகை வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.
நாகை மாவட்டம், செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியத்தில் ஒரு வாரத்தில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கா விட்டால் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை திமுக நடத்தும் என்று தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் அப்துல்மாலிக் தெரிவித்தார்.
2017-18ம் ஆண்டுக்கான விவசாய பயிர் காப்பீட்டு தொகை விவசாயிகளுக்கு தராமல் காலம் தாழ்த்தி வருவது குறித்து செம்பை தெற்கு ஒன்றிய திமுக சார்பில் பொறுப்பாளர் அப்துல்மாலிக் தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் மயிலாடுதுறை ஆர்டிஓ தேன்மொழி மற்றும் தாசில்தார் சுந்தரத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட பொறையார், திருக்காளச்சேரி, திருவிடைகழி, நல்லாடை, மேமாத்தூர், திருக்கடையூர், ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு உட்பட்ட 28 ஊராட்சிகள் தரங்கம்பாடி பேரூராட்சி விவசாயிகள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 2017-18 ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீட்டு பிரிமியம் தொகை  கட்டி உள்ளனர். ஆனால் இதுவரை காப்பீட்டு தொகை வழங்கவில்லை. இதுகுறித்து அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும், கூட்டுறவு வங்கிகளும் முறையான பதில் கூறுவதில்லை. தாசில்தார் முயற்சி எடுத்து விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை கிடைக்க செய்ய வேண்டும். இனியும் தாமதப்படுத்தினால் விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோருடன் சேர்ந்து திமுக பயிர் காப்பீட்டு தொகை கிடைக்கும் வரை மாபெரும் போராட்டத்தில் ஈடுபடும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : strike ,Union ,announcement ,DMK ,
× RELATED செங்கல்பட்டில் ரயில் மறியல்: விவசாயிகள் கைது