×

பெரும்புதூர் அருகே திமுக பிரமுகர் கொலையில் திருவள்ளூர் கோர்ட்டில் 5 பேர் சரண்: காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

திருவள்ளூர், பிப். 15: பெரும்புதூர் அருகே நடந்த திமுக பிரமுகர் பிள்ளைப்பாக்கம் ரமேஷ் கொலை வழக்கில் மேலும் 5 பேர் நேற்று திருவள்ளூர் கோர்ட்டில் சரணடைந்தனர்.ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் பள்ளத் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (48). திமுக செயலாளர். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இவரது மனைவி மாரி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன், பிள்ளைப்பாக்கம் திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் ரமேஷ் கலந்துகொண்டார்.பின்னர், ஸ்ரீபெரும்புதூரில் நடந்த ஊராட்சி செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்திலும் கலந்துகொண்டார். அங்கு கூட்டம் முடிந்தவுடன் ரமேஷ், ஸ்ரீபெரும்புதூர் - குன்றத்தூர் சாலையில் கட்சிப்பட்டு பகுதியில் உள்ள அவரது அலுவலகத்துக்கு சென்றார். அப்போது ஆட்டோ, பைக்குகளில் வந்த 10 பேர் கும்பல், அலுவலகத்தில் இருந்த ரமேஷை சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு தப்பியது. புகாரின்படி, பெரும்புதூர் இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தார். விசாரணையில், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் பகுதியை சேர்ந்த குல்லா (எ) விஸ்வநாதனும், அவரது கூட்டாளிகளும் ரமேஷை கொலை செய்தது தெரிந்தது.

இந்நிலையில், குல்லா (எ) விஸ்வநாதன் (24), சுரேந்தர் (25), சத்யா (27), செந்தில்குமார் (28) ஆகியோர் திருச்சி கோர்ட்டில் இரு நாட்களுக்கு முன் சரணடைந்தனர். இதை தொடர்ந்து, அதே பகுதியை சேர்ந்த வி.சந்துரு (22), அசோக் என்ற ரத்தினகுமார் (22), வி.பாலச்சந்துரு (21), கே.அஜீத்குமார் என்ற படையப்பா (21), எம்.மகேஷ் (21) ஆகிய 5 பேர் நேற்று மாலை திருவள்ளூர் ஜே.எம்., நீதிமன்றம் எண் 1ல் சரண் அடைந்தனர்.இவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 5 போரையும் போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.சரணடைந்தவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அப்போதுதான் எதற்காக கொலை நடந்தது, தொழில் போட்டியா, அரசியல் காழ்ப்புணர்ச்சியா என்பது தெரிய வரும் என போலீசார் கூறினர்.

Tags : persons ,court ,Tiruvallur ,Perumbupur ,DMK MLA ,
× RELATED மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கட்டண விலக்கு